சைப்ரஸில் பிரதமர் மோடி PTI
இந்தியா

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம்

DIN

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா்.

கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளாா். இதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) சைப்ரஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

பிரதமர் வருகையையொட்டி சைப்ரஸின் லார்னாகா விமான நிலையத்தில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் க்றிஸ்டோடௌலிடெஸ் வரவேற்றார்.

இதனிடையே, சைப்ரஸில் பிரதமரைக் காண திரண்டிருந்த இந்திய வம்சாவளி மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். குடும்பமாக திரண்டிருந்த மக்கள் கைகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி நின்று வரவேற்றனர்.

அங்கு திரண்டிருந்த குழந்தைகள் ஏந்தியிருந்த பதாகைகளில் ‘நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.

சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

சைப்ரஸ் அதிபர் நிகோஸ் க்றிஸ்டோடௌலிடெஸுடன் பிரதமர் மோடி நாளை(ஜூன் 16) இருநாட்டு உறவுகள் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஒரே ஆள்! ஆனால் 2 வாக்கு!” ஆதாரங்களுடன் ராகுல் சராமாரி குற்றச்சாட்டு!

ரெட்ட தல டீசர்!

வாக்குத் திருட்டு!: ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்? ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

“House No: 0! ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்! சிரிக்காதீங்க!” ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT