பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி வைத்து மிரட்டும் இளம்பெண் படம் - எக்ஸ்
இந்தியா

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்!

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்பவர்களை இறக்கக் கோரியதால், பெட்ரோல் நிலைய ஊழியரை தகாத வார்த்தை கூறி அப்பெண் மிரட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திற்குட்பட்ட பில்கிராம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், காரில் வந்த குடும்பத்தினர் எரிவாயு நிரப்ப வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

எரிவாயு நிரப்பும்போது காரில் உள்ள அனைவரும் இறங்க வேண்டும் என பெட்ரோல் நிலைய ஊழியர் ரஜ்னேஷ் குமார் கோரியுள்ளார். ஆனால், காரில் வந்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். காரை இயக்கிவந்தவர் ரஜ்னேஷை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது காரில் இருந்து இறங்கிவந்த பெண் ஒருவர், ரஜ்னேஷின் மார்பை நோக்கி துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், துப்பாக்கி வைத்து மிரட்டிய ஈஷான் கான் மற்றும் அவரின் மகள் அர்பியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிக்கு அவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

SCROLL FOR NEXT