குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கிருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்திருக்கிறார். இந்த விபத்து நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்துக்குப் பின் அந்த வழித்தடத்தில் அதாவது அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம்(AI-159) தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்கவிருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு விமானக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3-வது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.