ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தின் விடியோவை மாவட்ட நிர்வாகம் மண்டி பகிர்ந்துள்ளது.
பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். அப்பகுதியில் பெய்த கனமழையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தகவல்களின்படி, 2 பேர் பேருந்தின் அடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க மீட்புக் குழுவினர் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நெர்ச்சோக் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மண்டியின் கூடுதல் துணை ஆணையர் மதன் குமார் விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.