அகமதாபாத் சிவில் மருத்துவமனை PTI
இந்தியா

அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் அடையாளம் காணும் பணி பற்றி...

DIN

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர். பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக, குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில்,

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, 210 டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், 187 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள சடலங்களை ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர நாள்: இபிஎஸ், விஜய் வாழ்த்து!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேர் பயணம்!

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

SCROLL FOR NEXT