பெங்களூர் விமான நிலையம் 
இந்தியா

மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..

DIN

பெங்களூரில் உள்ள கெம்பகௌடா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கெம்பகௌடா விமான நிலையத்தின் வளாகத்தினுள் இரண்டு வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும், திட்டம் Aஇன் ஒரு பகுதியாக முதல் திட்டம் தோல்வியடைந்தால் திட்டம் B செயல்படுத்தப்படும். மேலும் விமான நிலைய கழிப்பறையில் உள்ள ஒரு குழாய்க்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும் புதன்கிழமை இரவு(ஜூன் 18) பயங்கரவாதியின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர் விமான நிலையத்திற்குப் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அங்குத் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில் இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காண போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இது அச்சுறுத்தல் மற்றும் புரளி என்று போலீஸார் தெரிவித்தனர்.

மிரட்டல் அனுப்பப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் ஐடிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் முறையான விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, ஜூன் 18ல் ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு மின்னஞ்சல்கள் குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT