முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூரின் தொடர் விளைவு! பாகிஸ்தான் விமானத் தளத்தின் செயல்பாட்டில் தாமதம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் விமானத் தளம் செயல்படாது என தகவல்

Updated On : 19 ஜூன், 2025 at 5:47 PM
ஆபரேஷன் சிந்தூர் - ENS
பகிர்:

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் விமானத் தளம் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதன் விளைவாக, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹிம் யார் கான் மூடப்பட்டு செயல்படாமல் உள்ள நிலையில், தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதிக்கு பின்னர்தான் செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, மே 6 ஆம் தேதி நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், காஷ்மீரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பாகிஸ்தானின் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதையும் படிக்க: ஈரான் தலைமை மதகுரு கமேனிக்கு இஸ்ரேல் வெளிப்படை எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.