ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து  EPS
இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தது பற்றி...

DIN

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை(ஜூன் 19) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பல தரப்பினரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT