காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 3,500 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்தநாளையொட்டி, தில்லியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
மேலும், வேலைவாய்ப்புகளைப் பெற, 8,500 பேர் பதிவு செய்ததாகவும், அவர்களில் 7,500 பேர் முகாமில் பங்கேற்றதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, பங்கேற்றவர்களில் 3,500 பேருக்கு முகாமிலேயே நியமனக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட சுற்று நேர்காணலுக்கும் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகையில், இந்த நிகழ்வு, ஒரு தேர்தல் பேரணியோ மதக் கூட்டமோ அல்ல. இது வேலைதேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கூட்டம்.
வேலைவாய்ப்பின்மை மீதான இளைஞர்களின் விரக்திக்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது.
முகாமில் பங்கேற்றவர்கள், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள் படித்தவர்கள், ஆனால் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள்.
இவர்களில் பலருக்கும், கடந்த 11 ஆண்டுகளில் நடத்தப்படும் முதல் வேலைவாய்ப்பாகக் கூட இருக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த வேலைவாய்ப்பு முகாமில் அரசு வேலைகளும் கிடைக்கப் பெறலாம் என்று கூறினர்.
இதையும் படிக்க: கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.