ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டு அதன்மூலம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து கடந்த 2022 - 23 காலகட்டத்தில், நேபாளத்துக்கு டைல்ஸ் மற்றும் வாகன உதிரி பாகங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பது வெளிச்சமானது.
இதையடுத்து, ஏற்றுமதியில் முறைகேட்டில் ஈடுபட்டு போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகள் மூலம் ஜிஎஸ்டி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பாட்னாவிலுள்ள ஜிஎஸ்டி துறை கூடுதல் ஆணையர் உள்பட 6 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 இடங்களில் சிபிஐ இன்று(ஜூன் 21) சோதனை நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.