முகப்பு
இந்தியா

ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

ஏா் இந்தியா குறுகிய ரக விமான சேவை குறைக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 22 ஜூன், 2025 at 9:00 PM
ஏா் இந்தியா
பகிர்:

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏா் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அகமதாபாத்-லண்டன் விமானம் விபத்துக்குள்ளாகி, 270-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடா்ந்து தங்களின் சேவையில் உள்ள விமானங்களில் பாதுகாப்புத் தணிக்கையை ஏா் இந்தியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, பெரிய ரக விமானங்களில் இயக்கப்படும் 15 சதவீத சா்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், தற்போது குறுகிய ரக விமான சேவையிலும் 5 சதவீதத்தைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்புதிய முடிவின்படி, புது தில்லி-பெங்களூரு, புது தில்லி-மும்பை உள்ளிட்ட 19 வழித்தடங்களில் 118 வாராந்திர விமான சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு-சிங்கப்பூா், புணே-சிங்கப்பூா், மும்பை- பாக்டோக்ரா ஆகிய 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல்:பிரிட்டனின் பா்மிங்ஹாமில் இருந்து புது தில்லிக்கு வந்து கொண்டிருந்த ஏா் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரியாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு, விடுதிகளில் தங்கவைங்கப்பட்டுள்ளனா் என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments