முகப்பு
இந்தியா

திருப்பதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தலைமைத் தளபதி வழிபாடு!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சாமி தரிசனம்

Updated On : 22 ஜூன், 2025 at 10:33 PM
திருப்பதி
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையான் சுவாமியை இன்று(ஜூன் 22) பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கூட்டாகச் சென்று வழிபட்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புப்படையின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் ஆகியோர் திருமலையில் வழிபாடு மேற்கொண்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தில்லியிலிருந்து சனிக்கிழமை சிறப்பு விமானத்தில் அவர்கள் திருப்பதி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து உயரதிகாரிகள் வரவேற்பளித்தனர். அதன்பின் அவர்கள் சித்தூர் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆயுத தளவாடத்தையும் பார்வையிட்டனர். இதையொட்டி கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து திருமலை கோயில் பரம்பரிய முறைப்படி சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கோயில் தரப்பில் சுவாமி படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.