கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர். ANI
இந்தியா

குஜராத் இடைத்தேர்தல்: பாஜக - 1; ஆம் ஆத்மி - 1 வெற்றி!

குஜராத் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி...

DIN

குஜராத்தில் இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில் காதி மற்றும் விசாவதர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று(ஜூன் 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத்தில் காதி தொகுதியில் ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ராஜேந்திர குமார் 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேநேரத்தில் விசாவதர் தொகுதியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. அதன்படி இத்தாலியா கோபால் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் சஞ்சீவ் அரோரா வெற்றியை நெருங்கி வருகிறார். தற்போது காங்கிரஸ் வேட்பாளரைவிட 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கேரளத்தின் நிலம்பூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மேற்குவங்கத்தின் காலிகன்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய தீயே... ராஷி சிங்!

போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

SCROLL FOR NEXT