இந்தூரிலிருந்து புவனேசுவரம் செல்லும் 140 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது 6E 6335 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தின் விமானிகள் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கவனித்ததாக விமான நிலைய இயக்குநர் விபின் காந்த் சேத் தெரிவித்தார்.
விமானம் மீண்டும் ஏப்ரனுக்குக் கொண்டுவரப்பட்டது. பொறியாளர்கள் தொழில்நுட்பக்ந கோளாற்றைச் சரிசெய்த பின்னர், விமானம் புறப்பட்டது.
இதன் காரணமாக திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரன் என்பது விமான நிலையத்தின் ஒரு பகுதியாகும், அங்கு விமானம் நிறுத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பயணிகள் ஏற அல்லது இறக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.