ஊழல் தடுப்பு பிரிவு சோதனை 
இந்தியா

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவர் வீட்டில் சோதனை..

DIN

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரான மஜிதியாவின் வீட்டில் எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை

மஜிதியாவின் மனைவியும் அகாலி தள எம்எல்ஏவுமான கணீவ் கௌர் மஜிதியா 30 பேர் கொண்ட குழு தனது வீட்டிற்குள் நுழைந்ததாகவும்,

சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக மஜிதியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில்,

போதைப்பொருள் வழக்கில் பகவந்த் மான் அரசு தனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியாததால், பொய்யான வழக்கைத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

ஊழல் தடுப்பு மூத்த காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு சோதனை நடத்தியதியது. நீங்கள் எத்தனை எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தாலும் நான் பயப்படமாட்டேன், நான் பேசுவதைத் தடுக்கமுடியாது.

நான் ப்போதும்பஞ்சாபின் பிரச்னைகள் பற்றிப் பேசி வருகிறேன். தொடர்ந்து அவ்வாறு பேசுவேன் என்று அவர் கூறினார்.

பஞ்சாப் காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு மஜிதியாவுக்கு எதிரான 2021 போதைப்பொருள் வழக்கை விசாரித்து வருகிறது. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அகாலி தலைவருக்குப் பல முறை சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT