தாவி ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் மீட்புக்குழு 
இந்தியா

ஜம்முவில் கனமழை: ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 9 பேர் மீட்பு!

ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மீட்பு..

DIN

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேரை காவல்துறை மற்றும் துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, அதே நேரத்தில் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டு வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதன் லால் (52) என்ற தொழிலாளி காலை 8.45 மணியளவில் தாவியில் மணல் எடுக்கச் சென்றிருந்தார், ஆனால் நகரின் ஜூவல் சௌக் பாலம் அருகே திடீரென நீர் மட்டம் உயர்ந்ததால் சிக்கிக்கொண்டார். மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்களால் அவர் மீட்கப்பட்டார், சுமார் 2 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டார்.

மேலும், திதி கொடுக்கச் சென்ற எட்டு பேர் தாவி ஆற்றில் சென்றபோது நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. அவர்களையும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் பல குதிரைகளும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழையால் ஏற்பட்ட மண் சரிவுகள், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மேஹாத், ராம்பன் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்று போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரியாசி மாவட்டத்தின் கத்ரா நகரில் அதிகபட்சமாக 108.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜௌரி (80 மிமீ), உதம்பூர் (71.4 மிமீ), பூஞ்ச் ​​(48 மிமீ) மற்றும் ராம்பன் (47.5 மிமீ) பதிவாகியுள்ளன.

ஜூன் 27 ஆம் தேதி வரை ஜம்மு பிரிவின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

SCROLL FOR NEXT