சிபிஎஸ்இ கோப்புப்படம்
இந்தியா

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரு பொதுத் தேர்வுகள் தொடர்பாக....

DIN

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுபோல, சிபிஎஸ்இ நிர்வாகம், பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதன்படி, 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழக்கம் போல பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும் அடுத்ததாக மே மாதம் ஒரு பொதுத் தேர்வும் நடைபெறும். இதில், பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் பொதுத்தேர்வை மாணவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டும், ஆனால் இரண்டாம் தேர்வை மாணவர்கள் விரும்பினால் அல்லது தேவை இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அறிவியல் உள்ளிட்ட உள்மதிப்பீடு (இன்டர்ன்) தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பொது தேர்வுகளையும் எழுதும் பட்சத்தில், எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இரண்டாம் பொதுத் தேர்வை எழுதி அதிகபட்சமாக மூன்று பாடங்களில் (அறிவியல், கணிதம், சமூக அறிவியல், மொழிப்பாடம் - இவற்றில் மூன்று) மதிப்பெண்களை இம்ப்ரூவ் செய்துகொள்ளலாம்.

ஒரு தேர்வை மட்டும் எழுதுவதா, இரண்டு பொதுத் தேர்வுகளையும் எழுதுவதா என்பதை மாணவர்களே முடிவு செய்துகொள்ளலாம்.

முதல் பொதுத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதினால், இரண்டாம் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை இறுதியானதாக எடுத்துக் கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்வு நடைபெறும் முறை, பாடப்பிரிவுகள், வினாத்தாள் என அனைத்தும் பழைய நடைமுறைப்படியே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

முதல் பொதுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும் இரண்டாம் பொதுத் தேர்வின் முடிவுகள் ஜுன் மாதத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

பெண்பால் மகிமை... சத்யா தேவராஜன்!

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

SCROLL FOR NEXT