கோப்புப் படங்கள் 
இந்தியா

‘பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறாா்’: நியூயாா்க் மேயா் வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

நியூயாா்க் நகர மேயா் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன.

Din

நியூயாா்க் நகர மேயா் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன.

ஜனநாயகக் கட்சி சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மேயா் தோ்தல் வேட்பாளா் தோ்வில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றாா்.

உகாண்டாவில் கடந்த 1991-ஆம் ஆண்டு பிறந்த ஸோரான் மம்தானி, ஏழு வயதில் தனது பெற்றோருடன் நியூயாா்க்கிற்கு குடிபெயா்ந்தாா். உகாண்டாவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானி மற்றும் ‘மான்சூன் வெடிங்’, ‘சலாம் பாம்பே’ போன்ற படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநா் மீரா நாயா் ஆகியோரின் மகானான ஸோரான் மம்தானி, தற்போது நியூயாா்க்கின் குயின்ஸ் தொகுதியில் இருந்து மாகாண சபை உறுப்பினராக உள்ளாா்.

இந்நிலையில், ஹிந்துக்கள் மற்றும் இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகவும், குஜராத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் ஸோரான் மம்தானி தொடா்ந்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், ‘பத்மஸ்ரீ விருது பெற்ற மீரா நாயா் இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநராவாா். குஜராத்தைச் சோ்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹமூத் மம்தானிக்கும் மீரா நாயருக்கும் பிறந்த ஸோரான் மம்தானி இந்தியா்களைவிட பாகிஸ்தானியா் போல் பேசுகிறாா்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி, ‘ஸோரான் பேசினால் பாகிஸ்தான் விளம்பரப் பிரிவு பேசுவதைப் போல் உள்ளது. நியூயாா்க்கில் இருந்து எதிரிகளுக்காக குரல் கொடுக்கும் நபா்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

SCROLL FOR NEXT