ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்போன் வாயிலாக உரையாடியதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின்போது, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இத்துடன், அந்நாட்டிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர உதவியதற்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் - ஈரான் இடையில் நடைபெற்ற போரானது நிறுத்தப்படுவதாக, கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த போர்நிறுத்தத்தை வரவேற்ற இந்திய அரசு, ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அவ்விடங்களில் நிலவும் கதிர்வீச்சுகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
India and Iran Foreign Ministers' Dialogue!
இதையும் படிக்க: கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.