சூடான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
2 ஆவது இந்திய - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சூடானின் வெளியுறவு அமைச்சர் மொஹியெல்டின் சலீம் அஹமது இப்ராஹிம் மற்றும் லெபனானின் வெளியுறவு அமைச்சர் எஸ் எம் எல்போர் ஆகியோர் தில்லி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சூடானின் அமைச்சர் இப்ராஹிமை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜன. 30) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து, அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது:
“சூடானில் நடைபெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் நமது தொடர்ச்சியான மனிதாபிமான ஆதரவு மற்றும் உதவிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, லெபனானின் வெளியுறவு அமைச்சர் எஸ் எம் எல்போரையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தலைமையில் 2 ஆவது இந்திய - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் வரும் ஜன.31 அன்று நடைபெறுகின்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.