கோப்புப்படம்.  
இந்தியா

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். ஹாஜி அலியில் உள்ள லோட்டஸ் ஜெட்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களுடன் இணைந்து போலீஸார் மூன்று பேரையும் மீட்டு நாயர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இருவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக அதிகாரி கூறினார்.

பலியானவர்கள் சந்தோஷ் விஸ்வேஷ்வர் (51) மற்றும் குணால் கோகடே (45) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் சஞ்சய் சர்வங்கர் (58) சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Two persons drowned and one sustained injuries while immersing ashes in the sea at Worli here on Saturday, an official said.

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

SCROLL FOR NEXT