தில்லியில் மழை 
இந்தியா

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

காற்று மாசுபாட்டைக் குறைக்க ரூ.3 கோடியில் செயற்கை மழை திட்டம்: ஜூலை 4 தொடக்கம்!

DIN

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது.

ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. விமானத்திலிருந்து வான் வழியாக நிலப்பரப்பை நோக்கி செயற்கை ரசாயனங்கள் தூவி அதன்மூலம் சுமார் 90 நிமிஷங்கள் வரை செயற்கை மழைப்பொழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இற்கான உரிய அனுமதி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை மழைப்பொழிவு செய்வதற்கான செலவு ரூ. 3.21 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு துறையும் பங்களிப்பை வழங்குகிறது. முதல்கட்டமாக வடமேற்கு தில்லி மற்றும் தில்லி புறநகர் பகுதிகளில் செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Artificial rain trial to reduce air pollution: Starts July 4!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

SCROLL FOR NEXT