தில்லியில் மழை பெய்து, காற்றின் மாசு சற்று குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்தாண்டின் முதல் மழையாக பதிவுசெய்யப்பட்டதுடன், மாநிலத்தில் காற்று மாசு சற்று குறைந்துள்ளது.
தில்லியில் நீண்டகால வறண்ட குளிர்கால நிலையை இறுதியாக இன்றைய மழை முடிவுக்குக் கொண்டுவந்தது. நகரத்தின் பல பகுதிகளில் இடியுடன்கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியதுடன், அதிக காற்று மாசு என்ற நிலையிலிருந்து சிறிது குறைந்தது.
தில்லியில் அதிகாலை முதல் பிற்பகல் வரையில் ஒன்று அல்லது இரண்டு முறையும், பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் மிகவும் லேசானது முதல் லேசான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், ஆரஞ்சு நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக வானிலை எச்சரிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெகுநாள்களாகவே காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்று மாசைக் குறைக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், காற்றின் தரத்தை முன்னேற்றத்திலோ காற்று மாசைக் குறைக்கவோ மாநில அரசின் நடவடிக்கைகளால் இயலவில்லை.
இந்த நிலையில்தான், தில்லியில் இன்று காலை மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.