பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
டார்ன் டாரன்: பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
பன்டோரி கோலா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இடிந்து விழுந்த வீடு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. வீட்டின் மேற்கூரை பலமிழந்து காணப்பட்ட நிலையில், அதில் மிக எடை கொண்ட தேவையற்றப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததால் மேற்கூரை இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
பலியானவர்கள், கோவிந்தா (40), அவரது மனைவி அமர்ஜித் (36), பிள்ளைகள் குர்பஜ் (14), குர்லால் (17), மகள் ஏகம் (15) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. வாட்ஸ்ஆப்பில் கைதவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி