திருப்பதி வான்வெளியில் விமானங்கள் பறப்பதைத் தடைசெய்யக் கோரி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடிதம் அனுப்பியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோயிலில், நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் உள்பட வேறு நாடுகளில் இருந்தும்கூட பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில், திருமலை திருப்பதியின் வான்வெளியில் விமானங்கள் பறப்பதால், கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் பி.ஆர். நாயுடு எழுதிய கடிதத்தில் கூறியதாவது, ``திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகம சாஸ்திர விதியின்படி, கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை மனதில்கொண்டு, திருமலை வான்வழியை விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இதையும் படிக்க: பாஜக மேயரின் வகுப்புவாதத்தால் சர்ச்சை!
திருமலையின் மலைகளில் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பிற வான்வழி நடவடிக்கைகளால் திருப்பதி ஏழுமலையான் கோயிலைச் சுற்றியுள்ள புனிதமான சூழலுக்கு அச்சுறுத்தலாக தொந்தரவு செய்யப்படுவதாக உள்ளது.
ஆகையால், திருமலை திருப்பதி வான்வழியை, விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிப்பதன் மூலம் திருமலையின் புனிதத்தன்மை, கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தைப் பாதுகாக்க முடியும். இந்த விவகாரத்தில் உடனடியாக பதிலளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.