ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மையா என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
சில காலத்துக்கு முன்பு தாங்கள் இருவரும் நட்பில் இருந்ததாக சச்சின் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹிமானியின் செல்போன், சச்சின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ஹிமானி தன்னிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை வாங்கியிருப்பதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் காவல்துறையிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிமானி வீட்டிலிருந்த சூட்கேஸில், அவரது சடலம் வைக்கப்பட்டது எப்படி என்றும், கொலை நடந்தது எப்படி என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கொலையாளியைக் கைது செய்யும்வரை ஹிமானி உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்த நிலையில், தற்போது கொலை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அறிந்ததும், இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமானி கொலை குறித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எங்களுக்கு நியாயம் வேண்டும். குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இதையும் படிக்க.. காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஹரியாணா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸில் ஹிமானி நர்வால் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இருந்த அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. இந்நிலையில்தான், ஹரியாணாவைச் சேர்ந்த சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.