இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்... 
இந்தியா

இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்..

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!

இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தேசியக்கொடி மற்றும் இந்திய வீரர்களின் புகைப்படத்துடன் பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூரில் வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரண்ட ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரத்தின் மும்பையில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களால் பெரும்பாலான இடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தன. மூவர்ண கொடியை ஏந்தியவாறு ரசிகர்கள் பாரத் மாதகி ஜே... எனக் கோஷமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ஜம்மு-காஷ்மீரிலும் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டியது.

பாகிஸ்தான் சிந்து நதியில் ரூ. 80,000 கோடி தங்கம்! இந்தியாவுக்கு பங்குள்ளதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT