இந்தியா

இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 950 பில்லியன் டாலர்!

அதிக நிகர மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 9.4% அதிகரிக்கும் என்று ஆய்வில் தகவ்ல்

DIN

இந்தியர்களில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 9.4% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்களில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை குறித்து உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் அதிக நிகர மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 85,698 என்ற நிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது; தொடர்ந்து, 2028 ஆம் ஆண்டில் 9.4 சதவிகிதம் அதிகரிப்புடன் 93,753 என்ற எண்ணிக்கையை எட்டும் என்று கூறுகிறது.

உலகளவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், 2023-ல் 2,243,300 எண்ணிக்கையில் இருந்து, 2024-ல் 4.4 சதவிகிதம் உயர்ந்து 2,341,378-ஆக மாறியது.

உலகளவில் பணக்காரர்களில் 3.7 சதவிகிதத்தினரைக் கொண்ட இந்தியா, தற்போது அமெரிக்கா (9,05,413), சீனா (4,71,634), ஜப்பான் (1,22,119) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய பில்லியனர்களின் மொத்த செல்வம் 950 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT