இந்தியா

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, நாய்களின் தாக்குதலும் அதிகரிப்பு

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில் ஓநாய்களின் தாக்குதலால் 8 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் வரையில் பலத்த காயமடைந்தனர். ஓநாய் தாக்குதலைத் தடுக்க, சுமார் 165 பேர் கொண்ட குழுவுடன் அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது.

ஓநாய்களின் தாக்குதல் ஓய்வடைந்த நிலையில், தற்போது நாய்களின் தாக்குதல் தலைதூக்கி உள்ளது. மஹ்சி பகுதியில் கடந்த 10 நாள்களில் நாய்களின் தாக்குதலால் 12 வயது சிறுமி பலியானதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, 81 கால்நடைகளையும் நாய்கள் காயப்படுத்தியுள்ளன.

நாய்களின் தாக்குதலைத் தொடர்ந்து, 6,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதுடன், வெளியில் செல்லும் மக்கள் கைகளில் குச்சியுடன் செல்லுமாறும் கால்நடை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT