இந்தியா

மகளிர் தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

மகளிர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DIN

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துப் பதிவில், ``சர்வதேச மகளிர் தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம். இன்றைய நாளில் பெண்களின் உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கிறோம்.

நமது சகோதரிகளும் மகள்களும் கூரையை உடைத்து, அதன் எல்லைகளைத் தாண்டி செழிக்கிறார்கள். பல்வேறு துறைகளில் புதிய பாதைகளைச் செதுக்கும்போது பெண்கள் யாரும் பின்தங்காமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் பயணத்தில் அவர்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்துவோம். பெண்களும் சிறுமிகளும் அச்சமின்றி தங்கள் கனவுகளைத் தொடரக்கூடிய பாலின சமத்துவ உலகத்தை உருவாக்க ஒன்றாக செயல்படுவோம்’’ என்று கூறியுள்ளார்.

மகளிர் தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் ``பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக நமது அரசு எப்போதும் பணியாற்றி வருகிறது. வாக்குறுதியளித்தபடி, எனது சமூக ஊடகப் பக்கங்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் இன்று கையகப்படுத்தப்படும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

"தனுசு ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

"கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

கத்தனார் முதல் போஸ்டர்!

இயந்திரமல்ல, மனிதன்தான்... விமர்சனங்களுக்கு யானிக் சின்னர் பதிலடி!

SCROLL FOR NEXT