மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் PTI
இந்தியா

மணிப்பூரில் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

DIN

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அம்மக்கள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு இன மக்களிடையே நில விரகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூரின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் கங்போக்கி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் குகி கிளர்ச்சியாளர்களிடையேயும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குகி கிளர்ச்சியாளர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குகி மக்கள் அதிகம் வசிக்கும் சூரசந்த்பூர், தெங்னோபால் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரை விரட்டும் வகையில் டயர்களை எரித்தும், புல்டோசர் கொண்டு சாலைகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் ஞாயிற்றுக்கிழமையான இன்று எந்தவிதமான வன்முறையும் பதிவாகவில்லை. கடைகள் செயல்படாததால் வணிகம் முற்றுலுமாக முடங்கியது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியே வர வேண்டாம் என கிளர்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

கம்கிபாய் பகுதியின் இம்பால் - திம்பூர் சாலையில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கலைமாமணி விருதுகள் - புகைப்படங்கள்

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT