மக்களவையில் ராகுல் காந்தி impress
இந்தியா

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்

வாக்காளர் பட்டியல் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

DIN

வாக்காளர் பட்டியல் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் பரஸ்பர வரி அச்சுறுத்தல், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை என மத்திய அரசை குறிவைத்து பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி முதல் நாளிலேயே பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அவையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றனர்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சௌகதா ராய் பேசுகையில்,

மேற்கு வங்கம் மற்றும் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் உள்ளதாக அவர் சுட்டுக்காட்டினார். அடுத்தாண்டு மேற்கு வங்கம், அசாமில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல்கள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல்களில் தவறுகள் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்துத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேசியதாவது,

தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அரசு இயற்திரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வாக்காளர்களின் பட்டியலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரம், ஹரியாணா, தில்லி ஆகிய நாடுகளில் அவர்கள் இதையே பயன்படுத்தியதாகவும், தற்போது மேற்கு வங்கத்திலும் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் (ஆட்சியில் இருக்கும் கட்சியும் இணைந்து) அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி போலி வாக்காளர்களை உருவாக்குகிறார்கள். தேர்தல் செயல்முறை நியாயமாக இல்லாவிட்டால் ஒரே ஒரு கட்சி மட்டுமே ஆட்சிக்கு வரும், அவர்கள் தொடர்ந்து ஊழலையும் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசுக் கடையில் தீவிபத்து! விரைந்த தீயணைப்பு வீரர்கள்! | Sivakasi | Fire

காலையில் வெய்யில்... பிற்பகல் பரவலாக மழை!

பிகார் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு!

டார்ஜிலிங் நிலச்சரிவு: உயிரிழப்பு 14 ஆக உயர்வு - தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது!

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

SCROLL FOR NEXT