கோப்புப்படம் 
இந்தியா

நீட் விண்ணப்பம்: திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அவகாசம்!

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக...

DIN

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன்(மார்ச் 11) நிறைவடைகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்டிஏ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.7-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 7-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ வாய்ப்பு வழங்கியது. அதன்படி மாணவா்கள் இணையதளம் வழியாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள www.neet.nta.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT