படகு கவிழ்ந்த ஆறு.  
இந்தியா

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

இரண்டு வயது குழந்தை மீட்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டது. மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்கள் சஞ்சய் (32), குஷ்பூ (30) மற்றும் கும்கம் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஹோலி கொண்டாட்டத்தின் போது அதே ஆற்றில் மூழ்கி இறந்த தினேஷின்(22) இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரும் கிராம மக்களும் இரண்டு படகுகளில் சர்தா நதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

சில குடும்ப உறுப்பினர்களையும் உடலையும் ஏற்றிச் சென்ற படகு கரையை அடைந்த நிலையில், ​​16 பேருடன் சென்ற படகு துரதிர்ஷ்டவசமான ஆற்றின் நடுவில் கவிழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT