முகப்பு
இந்தியா

பச்சிளம் குழந்தையைக் கொன்ற 12 வயது வளர்ப்பு மகள்! பகீர் பின்னணி!

பச்சிளம் குழந்தையை 12 வயது சிறுமி கொன்றது பற்றி...

இந்தியா

பச்சிளம் குழந்தையைக் கொன்ற 12 வயது வளர்ப்பு மகள்! பகீர் பின்னணி!

பச்சிளம் குழந்தையை 12 வயது சிறுமி கொன்றது பற்றி...

Updated On : 19 மார்ச், 2025 at 8:02 AM
பகிர்:

கேரளத்தில் 4 மாதக் குழந்தையை கிணற்றில் வீசி 12 வயது சிறுமி திங்கள்கிழமை கொலை செய்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணையில், கொலை செய்ததை சிறுமி ஒப்புக் கொண்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டம், பாப்பினிசேரி பகுதியில் உள்ள பரக்கல்லில் கடந்த திங்கள்கிழமை 4 மாதக் குழந்தை காணாமல் போயுள்ளது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் தேடிப் பார்த்ததில், அருகிலிருந்த கிணற்றில் குழந்தையை கண்டெடுத்துள்ளனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வளபட்டினம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த விசாரணையில் 4 மாதக் குழந்தை யாசிகாவை கிணற்றில் வீசிக் கொன்றதை 12 வயது சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டது ஏன்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தையின் தந்தை குடும்பத்துடன் கேரளத்தில் தங்கி பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி இல்லத்தரசியாக இருக்கிறார்.

இவர்கள் தந்தை உயிரிழந்த பிறகு தாய் விட்டுச் சென்ற 12 வயது சிறுமியை வளர்த்து வந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததால் தனக்கு பழையபடி அன்பும் பாசமும் கிடைக்காது என எண்ணிய சிறுமி, 4 மாதக் குழந்தையை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிணற்றில் வீசியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

“குழந்தையை கிணற்றில் வீசிய 12 வயது சிறுமி, பின்னர் காணாமல் போனதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.

பின், தொடர் விசாரணையில் குழந்தையை கிணற்றில் வீசியதை சிறுமி ஒப்புக் கொண்டார். முன்பு மாதிரி பாசமும் அன்பும் கிடைக்காது என்று எண்ணியதால் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த சிறுமியை கைது செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →