கச்சா எண்ணெய் கோப்புப் படம்
இந்தியா

நாட்டின் நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதல்: மத்திய அரசு

‘தேச நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது

Din

‘தேச நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது ’ என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியதா? என மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த பதிலில், ‘ரஷியாவைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட எரிசக்தி நிறுவனங்கள் மீது கடந்த ஜனவரி 14-ஆம் தேதி விதித்த பல்வேறு தடைகள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் அமெரிக்கா தெரிவித்தது.

ரஷியாவைச் சோ்ந்த பெரும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது அந்நிய சொத்து கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க அலுவலகம் தடை விதித்தது.

இந்த நிறுவனங்களுடன் வா்த்தகத்தில் ஈடுபடுவோா் வேறு எண்ணெய் நிறுவனங்களை கண்டறிந்து வா்த்தகத்தை தொடர 60 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய பல்வேறு காரணிகள் இருப்பினும், தேச நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான முடிவையே மத்திய அரசு எடுத்து வருகிறது.

எனவே, இந்திய கச்சா எண்ணெய் வா்த்தகா்கள், காப்பீட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கெனவே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கிவிட்டது’ என்றாா்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT