கோப்புப் படம் 
இந்தியா

மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!

தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாக ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.

DIN

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க வரிகளுக்கு ஏற்றாற்போல சாலைகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.

தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் மூலம் சுங்க வரியாக 11,945 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவைவிட வசூலிக்கப்படும் சுங்க வரி அதிகமாக இருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது, ``ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி சுங்கச் சாவடி வசூலிக்கப்பட்டது. ஆனால், சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்போது, சாமானிய மக்கள் ஏன் அதனைச் செலுத்த வேண்டும்?

ராஜஸ்தானில் பல தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் உள்ளன என்பதை அரசு அறிந்திருக்கிறதா? அத்தகைய சாலைகளில் சுங்க வரி வசூல் செய்வது குறித்து அமைச்சகம் விளக்கமளிக்க வேண்டும். சாலை கட்டுமான செலவைவிட அதிக சுங்கச்சாவடி வசூலித்த போதிலும், தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை மோசமாக உள்ளது.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. மோசமான சாலைகளுக்காக பயணிகள் ஏன் சுங்கச்சாவடி செலுத்த வேண்டும்? அதன் விளைவுகளை சாமானிய மக்கள் ஏன் சந்திக்க வேண்டும்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT