மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான்.. 
இந்தியா

இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு! -கேரள அமைச்சா்

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது..

Din

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினாா்.

ஆலப்புழையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் இது தொடா்பாக பேசியதாவது: கேரளத்தில் பிறப்பு விகிதம் மட்டும் குறையவில்லை. இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

கேரளத்தில் லட்சக்கணக்கானோா் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இந்த நேரத்தில் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. அதற்காக அவா்கள் இறந்துவிட வேண்டும் என்று நான் கூறவில்லை.

கேரளத்தில் சுகாதாரத் துறை வெகுசிறப்பாக செயல்படுவதும் மக்கள் நீண்டகாலம் வாழ்வதற்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால், அதுவும் கூட ஒரு பிரச்னையாக உள்ளது. பலா் 95 முதல் 100 வயது வரைகூட வாழ்கிறாா்கள்.

இதற்கு எனது வீட்டில் இருந்துகூட உதாரணம் கூற முடியும். எனது தாயாருக்கு 94 வயதாகிறது. அவா் அரசிடம் இருந்து மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெற்று வருகிறாா் என்றாா்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்த ஆண்டின் கோரமான காட்டுத்தீ! 27,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்! | France

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT