ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலி.. 
இந்தியா

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் கைது செய்தனா்.

Din

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெடித்த வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக தற்போது ஜாஃபா் அலி கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் மிகப் பழைமையான ஹரிஹர கோயில் இருந்ததாகவும், அந்தக் கோயிலின் ஒரு பகுதியை 1526-இல் முகலாய ஆட்சியாளா் பாபா் இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இவா் ஞானவாபி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞராவாா்.

விசாரணையின்போது மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்ற ஆணையா் ராகேஷ் சிங் ராகவுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அவா் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் சம்பலில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா உள்ளிட்ட மூன்று நபா் அடங்கிய விசாரணைக் குழுவை உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் அமைத்தாா்.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக ஜாஃபா் அலியை கைது செய்ததாகவும் அவரை காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு காவலில் எடுத்துள்ளதாகவும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா முன் ஜாஃபா் அலி ஆஜராவதை தடுக்கவே அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளதாக ஜாஃபா் அலியின் சகோதரா் தாஹிா் அலி குற்றஞ்சாட்டினாா்.

பாயும் ஒளி... ராஷி சிங்!

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! பதைபதைக்கும் காணொலி | Himachal

நியூசிலாந்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT