அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபியால் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அலுவலகங்களில் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபி குறித்து சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து உப்சாலா பல்கலைக்கழகம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு, 14 வெவ்வேறு பன்னாட்டு நிறுவன அலுவலகங்களில் உள்ள காபி இயந்திரங்கள் உள்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம், அலுவலக இயந்திரங்களில் வழங்கப்படும் காஃபியில் கொழுப்புகள் இருப்பது தெரிய வந்தது. சாதாரண ஃபில்டர் காபிகளுடன் ஒப்பிடும்போது, இயந்திரங்களிலிருந்து வரும் காஃபியில் கொழுப்பை அதிகரிக்கும் பொருள்களின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கொழுப்புகளால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான காபி இயந்திரங்கள் கொழுப்பு சேர்மங்களை திறம்பட வடிகட்டுவதில்லை. பொதுவாக, அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்படும் வழக்கமான காபி இயந்திரங்கள், இந்த கொழுப்பை அதிகரிக்கும் பொருள்களை எவ்வளவு திறம்பட வடிகட்டுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படவில்லை.
ஆனால், காகித வடிகட்டிகளைப் பயன்படுத்தும் வழக்கமான ஃபில்டர் காபி தயாரிப்பாளர்கள், இந்த கொழுப்பு சேர்மங்களில் பெரும்பாலானவற்றை அகற்றி விடுவர்.
இதனால், தினசரி அதிகளவிலான காபி அருந்துவோர்கள், காகித வடிப்பான்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் நன்கு வடிகட்டப்பட்ட காபியைத் தேர்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.
இதையும் படிக்க: உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.