தாய்லாந்து, இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!
தாய்லாந்து, இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி..
பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கை செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள 6-வது பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கிருந்து இலங்கை செல்கிறார். இந்தப் பயணத்தில் முக்கிய தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கவிருக்கிறார். மேலும், அவர் இந்தியாவின் நிதியுதவியில் அனுராதாபுரத்தில் செயல்படும் திட்டங்களையும் பார்வையிடுகிறார்.
பிரதமர் மோடி கடைசியாக 2019 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.