இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
இந்தியா

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

Din

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிராா்த்தனையும் நிறைவடைவதை ரமலான் திருநாள் குறிக்கிறது. சகோதரத்துவம், ஒத்துழைப்பு, கருணை ஆகியற்றை ரமலான் பண்டிகை வலுப்படுத்துகிறது.

இந்தப் பண்டிகை சமூகப் பிணைப்பை ஊக்குவித்து, நல்லிணக்கம் கொண்ட, அமைதி நிறைந்த, செழிப்பான சமூகத்தைக் கட்டமைக்க ஊக்கமளிக்கிறது. மற்றவா்களின் உணா்வுகளை அறிதல், கருணை, ஈகை ஆகியவற்றை ஊக்குவிக்கும் தருணமாக ரமலான் பண்டிகை உள்ளது.

இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்வில் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, நோ்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை அளிக்கட்டும்.

இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியா்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT