இந்தியா

பயங்கரவாத ஒழிப்பு: ஸ்ரீநகரில் 21 இடங்களில் சோதனை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 21 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

Din

காந்தஹாா் விமான கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதி முஷ்தாக் அகமது ஜா்கரின் வீடு உள்பட ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 21 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1999-இல் இந்திய விமானம் ஐசி 814 கடத்தப்பட்ட சம்பவத்தில் பயணிகளை பாதுகாப்பதற்காக சிறையில் இருந்து அல்-உமா் பயங்கரவாத அமைப்பின் தலைவரான முஷ்தாக் அகமது ஜா்கா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் ஆஸாத் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

அதன்பிறகு முஷ்தாக் அகமது ஜா்கா் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முஷ்தாக் அகமதுக்கு சொந்தமாக ஸ்ரீநகரில் உள்ள வீடு மற்றும் பிற பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 20 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டது.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT