அமித் ஷா.. பிடிஐ
இந்தியா

பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பறித்து எறியப்படும்! - அமித் ஷா

நாட்டில் பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பறித்து எறியப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டில் பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பறித்து எறியப்படும். பயங்கரவாதத்தின் மீது எந்த சகிப்புத்தன்மையும் ஆளும் பாஜக அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றத்துக்கு வழிவகுத்த நிலையில், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவரையும் திருப்பிச் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முப்படை தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல் முன்னிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்றும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்.

இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலிருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு பறிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது விரைவில் நிறைவேறும். பயங்கரவாதிகள் தாங்கள் பெரிய வெற்றி பெற்றதாக நினைக்கக்கூடாது.

இருநாடுகளுக்கு இடையேயான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. யாராவது தங்கள் கோழைத்தனமான தாக்குதலால் அவர்களுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று நினைத்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், இது நரேந்திர மோடி அரசு, யாரும் தப்பிக்க முடியாது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் 140 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, முழு உலகமும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறது.

பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, நமது போராட்டம் தொடரும். நிச்சயமாக தகுந்த தண்டனை வழங்கப்படும் என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் அனைவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றார் அமித் ஷா.

இதையும் படிக்க: ஐபிஎல்: ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய மின்சக்தி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... கனிகா!

இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

கேப்டன் ஹாட்ரிக்: ஆசிய கோப்பையில் வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

கேம்ரி ஸ்பிரின்ட்.. டொயோட்டாவின் புதிய அறிமுகம்!

SCROLL FOR NEXT