பஹல்காமில் தாக்குதல் நடந்த பகுதி 
இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் எனத் தகவல்.

DIN

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. என்.ஐ.ஏ. இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பஹல்காமில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஹல்காம் சம்பவத்திற்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் உளவு பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப். 15 ஆம் தேதி பஹல்காம் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் பயங்கரவாதி ஒருவர் உளவு பார்த்துள்ளார். அங்கு பாதுகாப்பு பலமாக இருந்த காரணத்தால் தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அரு பள்ளத்தாக்கு, பெடப் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் பயங்கரவாதிகள் உளவு பார்த்துள்ளனர். இந்த 3 பகுதிகளிலும் போதுமான பாதுகாப்புப் படையினர் இருந்ததால் தாக்குதலை தவிர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஏப். 22ஆம் தேதிக்கு இரு நாள்களுக்கு முன்னதாகவே அவ்விடத்திற்கு பயங்கரவாதிகள் வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஒரு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொண்டதாகத் தெரிகிறது. இதன்படி, சிம் கார்டு இன்றி குறுகிய தூரத்துக்கு அவர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இராமசாமி படையாட்சி பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

SCROLL FOR NEXT