ஜெய்ப்பூரில் மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், விஸ்வகர்மா தொழில்துறை பகுதியில் ஷாஹித் குரேஷி(37) தனது மனைவி ஃபர்ஹீன் குரேஷியை(26) கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீஸார், வெள்ளிக்கிழமை காலை ஃபர்ஹீன் குரேஷியின் உடலை பதரானா கிராமத்தில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் இருந்து மீட்டனர்.
ஹரிஜன் பஸ்தி பட்டா பஸ்தியில் வசித்து வந்த இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்பச் சண்டை காரணமாக இந்த கொலை நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, குரேஷி வியாழக்கிழமை தனது மனைவி ஃபர்ஹீனை திட்டத்தின் ஒரு பகுதியாக குப்பைக் கிடங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு கழுத்தை நெரித்து கொன்றார் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.