கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் X | B Z Zameer Ahmed Khan
இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்கை!

பாகிஸ்தான் மீதான போருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவளிக்காத நிலையில், அம்மாநில அமைச்சர் ஆதரவு

DIN

பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தான் முன்நின்று போரிடுவேன் என்று கர்நாடக வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் ஜமீர் அகமது கான் பேசியதாவது, ``நாங்கள் இந்தியர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக போருக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் தயாராக இருக்கிறேன். என்னை போருக்கு அனுப்பினால், ஒரு அமைச்சராக நான் முன்வரிசையில்தான் நிற்பேன்.

வேண்டுமென்றால், வெடிபொருள்களைக்கூட அணிந்து கொள்கிறேன். நான் நகைச்சுவைக்காகவோ வெறும் வாய்வார்த்தையாகவோ சொல்லவில்லை.

நாட்டுக்கு தேவைப்பட்டால், தற்கொலைப் படையாக மாறுவதற்கு, எனக்கு வெடிபொருள்களை அளிக்குமாறு பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கோருகிறேன்.

ஆனால், நாட்டின் கடைசி ஆயுதமாகத்தான் போர் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, போருக்கு ஆதரவளிக்காத நிலையில், அமைச்சர் ஜமீர் அகமது கான் போருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT