பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப்..! முன்னாள் வீரர் கணிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் கூறியதாவது...
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் பிப்.15ஆம் தேதி இலங்கையில் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன.
Advertisement
Advertisement
அரசியல் பிரச்னைகளால், தொடக்கத்தில் விளையாட மறுத்த பாகிஸ்தான் அணி பின்னர் சில நிபந்தனைகளுடன் விளையாட சம்மதித்தது.
இலங்கையில் நடைபெறும் என்பதால், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அதிகமான வீரர்களை களமிறக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங்கின் ஓவரில் அதிகபட்சமாக 36 ரன்கள் சென்றது. இந்நிலையில், அவருக்குப் பதிலாக குல்தீப் சேர்க்கப்படுவாரன கூறப்படும் நிலையில், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருப்பதாவது:
அனைத்து வீரர்களும் விக்கெட் எடுத்தார்கள். அர்ஷ்தீப் 4 ஓவர்கள் பந்து வீசவில்லை. ஷிவம் துபே 2, ஹார்திக் 4 ஓவர்களும் வீசினார்கள். இதிலிருந்து, குல்தீப் அடுத்த போட்டிக்கு வருவார் என்றே தோன்றுகிறது.
இலங்கையில் சுழல் பந்துவீச்சுக்கு ஆதரவு இருக்குமென்பதாலும் இந்திய அணி 3 சுழல்பந்துவீச்சாளர்களுடன் விளையாடிய வரலாறும் இருக்கின்றன.
கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் பிளேயிங் லெவனில் குல்தீப் வர எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்திக் பாண்டியா தொடக்க ஓவரை வீசியதும் குல்தீப் வருவதற்கான அறிகுறியே. அக்ஷர் படேலும் 2 விக்கெட்டுகள் எடுத்தது நல்லது என்றார்.
Former India captain Sunil Gavaskar expects leg-spinner Kuldeep Yadav to come in for pacer Arshdeep Singh in the national team's high-profile T20 World Cup game against arch nemesis Pakistan on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.