கோப்புப் படம் 
இந்தியா

தெலங்கானா: சத்தீஸ்கரின் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

தெலங்கானாவில் சத்தீஸ்கரைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த 14 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரண்டைந்துள்ளனர்.

தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான் பி.ரோஹித் ராஜுவின் முன்னிலையில் சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 14 உறுப்பினர்கள் இன்று (மே.6) சரணடைந்துள்ளனர்.

இதில், அந்த அமைப்பின் பகுதி ஆணைய உறுப்பினர்களாகச் செயல்பட்டு வந்த 2 உயர்நிலை மாவோயிஸ்டுகளும் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடையும் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் நடத்தி வரும் ‘ஆப்ரேஷன் செயூதா’ எனும் திட்டத்தின் நன்மைகளை அறிந்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவோயிஸ்ட் நடவடிக்கைகளைக் கைவிட்டு சாதாரண வாழ்க்கையை வாழ விரும்பும் நபர்கள் நேரடியாகவோ அல்லது தங்களின் குடும்பத்தினர் மூலமாகவோ அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட உயர் அதிகாரிகளைத் தொடர்புக்கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பட்டாசுகளுக்குத் தடை விதிக்க உ.பி., ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களுக்கு உத்தரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT