முகப்பு
இந்தியா

தில்லியில் ஒரே நாளில் 90 விமானங்கள் ரத்து!

தில்லி விமான நிலையத்தில் விமானங்களின் ரத்து குறித்து...

Updated On : 8 மே 2025, 4:43 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில் இருநாடுகளும் தங்களது வான்வழித் தடங்களை மூடியதுடன், விமானங்களின் போக்குவரத்தை மிகப் பெரியளவில் குறைத்துள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள 27 விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், தலைநகர் தில்லியின் விமான நிலையத்தில் 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து உள்பட மொத்தம் 90 விமானங்களின் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று (மே 8) காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரையில், அங்கிருந்த புறப்பட வேண்டிய 46 விமானங்கள் மற்றும் வரவிருந்த 33 விமானங்களின் போக்குவரத்து ரத்தாகியுள்ளன.

இருப்பினும், தில்லி விமான நிலையத்தின் 4 விமான ஓடுபாதை வழக்கம் போல் செயல்பட்டதாகவும், வான்வழித் தடங்களின் மாற்றத்தினால் சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை! இது 2-வது முறை!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments